பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற சந்தேக நபர் சிக்கினார்...!

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 02:38 PM
image

(செ.தேன்மொழி)
கிருலப்பனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தி தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஸ்வத்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் விவகாரம் தொடர்பில், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக, கிருலப்பனை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் இருவர் சென்றிருந்தனர்.

இதன்போது சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அவரை கைது செய்து அழைத்து வரும் நோக்கில், அவரது கைகளில் விலங்கிட முயற்சித்துள்ளனர். பின்னர், சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த, பொலிஸ் உத்தியோகத்தர் கலுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பகம் மற்றும் கைப்பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

இந்நிலையில் தப்பிச் சென்ற சந்தேக நபர், நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46