சர்வதேச கிரிக்கெட் நிர்வாக தரப்படுத்தலில் இலங்கை பின்நகர்வு - திஸ்ஸ அத்தனாயக்க

Published By: Vishnu

22 Mar, 2021 | 01:56 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச கிரிக்கட் நிர்வாக தரப்படுத்தலில் இலங்கை 10 ஆவது இடத்திற்கு பின்நோக்கிச் சென்றுள்ளது. கிரிக்கட் நிர்வாகம் மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை போன்வற்றால் இலங்கையில் கிரிக்கட் துறையை மேம்படுத்த முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையே இதற்கு காரணமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

பல மாதங்கள் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் நடைபெறவில்லை. எனினும் தற்போது மீண்டும் அவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள தரப்படுத்தலில் இலங்கை பத்தாவது இடத்திற்கு பின்நோக்கிச் சென்றுள்ளது. 

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றியதன் பின்னர் சர்வதே கிரிக்கட் சபை தரப்படுத்தலில் இலங்கை முதல் 8 இடங்களுக்குள் இடம்பிடிக்கும்.

எனினும் இம்முறை 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். ஆப்கானிஸ்தான் கூட இலங்கைக்கு முன்னதான இடத்தில் காணப்படுகிறது. இவ்வாறு இலங்கை பின்வாங்கியுள்ளமையால் உலக கிண்ண தொடரில் போட்டிடுவதற்கு முதலாவது சுற்றிலேயே தெரிவாக முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் உலகக் கிண்ண தொடர்பில் இலங்கைக்கு வாய்ப்புக்கள் கிடைக்காமல் போகக் கூடிய நிலைமை காணப்படுகிற என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35