எம்.சி.சி உடன்படிக்கை குறித்த முக்கிய விடயத்தை வெளியிட்ட சட்ட மா அதிபர்

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 03:00 PM
image

(செ.தேன்மொழி)

அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் சார்பில் முன்னிலையாகியிருந்த மேலதிக சொலிஸ்டர் ஜெனரால் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார். 

இலங்கையின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முன்வைக்கபட்டுள்ள , அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் சோபா ஒப்பந்தத்தில் , அரசாங்கம் கைச்சாத்திடுவதை தடுப்பதற்காக இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு குறிப்பிட்டு  அரச வைத்திய அதிகாரிகளால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் , இந்த மனு இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் , இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த , மேலதிக சொலிஸ்டர் ஜெனரால் இலங்கை அரசாங்கம் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்திலும் , அமெரிக்க இராணுவத்தினர் இந்நாட்டில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அனுமதி வழங்குவதற்கான சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் தீர்மானம் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த மனுக்கள் தொடர்பான பரிசீலனைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ள உயர்நீதிமன்றம் , அதன்போது  இந்த தீர்மானங்கள் தொடர்பான எழுத்து மூல ஆவணங்களை மன்றில் சமர்பிக்குமாறு மேலதிக சொலிஸ்டர் ஜெனராலுக்கு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08