அரச குடும்பத்தின் அடாவடித்தனங்கள்

21 Mar, 2021 | 08:02 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

அரசகுடும்பம். ஆதனை பிரிட்டனின் பாரம்பரிய பெருமை எனலாம். தமது தேசத்திற்குரிய மனிதர்களின் வேரும், அடையாளமும் அரச குடும்பமே என்பார்கள், பாரம்பரியத்தை நேசிக்கும் பிரித்தானியா பிரஜைகள். போரும் நெருக்கடிகளும் நிகழ்ந்த சமயங்களில், தேசத்தின் ஐக்கியத்தைப் பேணும் அடையாளமாகமன்னர்களும் மகாராணிமாரும் திகழ்ந்தார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.

இன்றும் அப்படித்தானா என்று எவரும் கேட்கலாம். அரச குடும்பத்திற்குள் ஆயிரம் நெருக்கடிகள். அதன் பாரம்பரிய பெருமையை மாத்திரமன்றி, இருப்பையே கேள்விக் குறியாக்கும் சிக்கல்கள். அரசகுடும்பத்தில் ‘மக்களின் இளவரசியாக’வாழ்ந்தவர், டயானா.

அரண்மனையின் இருண்ட சுவர்களுக்குள் வாழும் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதைப் பகிரங்கப்படுத்தியவர். அவரது கருத்தை உலகம் செவிமடுத்தது. அனுதாபம் காட்டியது.

உயிரிழந்து போனார், டயானா. ஆனால், அரசகுடும்பம் என்ற நிறுவனம் தளரவில்லை. 2ஆவது எலிசபெத் மகாராணியார் என்ற இரும்பு பெண்மணியால் அதன் போக்கில் இயங்கியது.

எனினும், மகாராணியின் பேரன், இளவரசர் சார்ள்சின் இரண்டாவது மகன் ஹரியும், அவரது மனைவியும் அரச குடும்பத்தின் ஆணிவேரை அசைத்திருக்கிறார்கள். அரச குடும்பமென்ற நிறுவனம்ரூபவ் காலத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டும் என்ற நாட்டம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்ரூபவ் இளவரசர் ஹரி.

ஒரு கட்டத்தில், அரியணை சுகமும் வேண்டாமெனக் கூறி, தமது மனைவியுடன் அமெரிக்கா சென்று, சலுகைகள் எதுவும் இன்றி சாதாரணப் பிரஜையாக வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி ஆளுமை ஒப்ராவின்ப்ரீயுடன் நடத்திய நேர்காணலில், ஹரியும் அவரது மனைவியும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் ஆழமானவை.

அவை அரச குடும்பத்திற்கு விமோசனம் கிடையாது என்ற நிதர்சனத்தை உலகறியச் செய்துள்ளன. ஹரியை காதல் திருமணம் செய்து கொண்ட மேகன்ரூபவ் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகை. அவரது தாய் ஆபிரிக்க வம்சாவளி அமெரிக்கர். தந்தை வெள்ளையர்.

ஹரி, மேகன் தம்பதிக்குப் பிறக்கப் போகும் பிள்ளையின் தோல் என்ன நிறமாக இருக்கும் என்ற அரச குடும்பத்தில் கேள்விக்கணை தொடுக்கப்பட்டதாகரூபவ் இந்தத் தம்பதி கூறியது.

இது தீவிரமான குற்றச்சாட்டு. இன-ரீதியான பன்முகத்தன்மையை வரித்துக் கொள்ளலே புதிய நாகரிகம் எனக் கருதும் உலகில்ரூபவ் அரச குடும்பத்திற்குள் இத்தனை இனவாதமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் கேள்வி.

இனவாதத்தைக் கக்கியவர், மகாராணியாரோ, அவரது கணவரோ அல்ல என்பதை ஹரி தெளிவுபடுத்தினார். ஓப்ராவின்ப்ரீயுடனான நேர்காணலில், தமது பாட்டியாரைத் தாம் பெரிதும் மதிப்பதாக ஹரி கூறினார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-12

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22