காணாமல்போனோர் தொடர்பான அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதனால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவோ அல்லது உண்மைகளை பூரணமாக கண்டறியவோ முடியும் என நாம் நம்பவில்லை. நடந்த அனைத்து கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக்கூற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

இராணுவத்தை தண்டிக்கவோ அல்லது சர்வதேச தலையீடுகள் மூலம் ஒருசிலரின் தேவைகளை பூர்த்திசெய்யவோ இந்த அலுவலகம் உருவாக்கப்படவில்லை. உண்மைகளை கண்டறியவே இது உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ஜே.வி.பி குறிப்பிட்டது.

மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் பிலம் ரத்நாயக தெரிவித்தார்.