முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் இரண்டு மகள்களையும் பார்வையிடுவதற்காக ஜனநாயக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகவினால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணபத்தையே அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது.

 ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் போர்க் குற்றச் செயல் விசாரணை  அறிக்கையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதையடுத்தே இவருக்கான வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது.