பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர், வங்கி ஆளுநரை சந்தித்தார் மஹிந்த

20 Mar, 2021 | 06:58 AM
image

பங்களாதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷின் வங்கியின் ஆளுநர் ஆகியோரை சந்தித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில் பிரதமருடன் ஜீ.எல்.பீரிஸ், அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் (2021.03.19) பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநரை ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்,பங்களாதேஷ் நாட்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஏ.கே.அப்துல் மோமனுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை நேற்று பகல் டாக்கா நகரில் இடம் பெற்றது. 

இதன் போது இலங்கைக்கும் பங்களாதேஸூக்கும் இடையிலான  இராஜதந்திர உறவு , வாணிப மற்றும் முதலீடு  ஆகிய துறைகளின் இரு தரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

இலங்கைக்கும் பங்களாதேஸூக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டுடன் 50 வருடங்கள் நிறைவுப்பெறுகின்றன. இவ்வுறவை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வது அவசியமானதாகும் என  இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த காலங்களில் பங்களாதேஸ் நாட்டின் பொருளதார வளர்ச்சி தொடர்பில் பிரதமர மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தினார்.

இலங்கையின் முதலீட்டாளர்கள் பலர் பங்களாதேஸில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளமை இரு நாட்டின் வாணிப துறையின் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறதுஎனவும் குறிப்பிட்டார்.

 பங்களாதேஸூக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றினைந்த ஆலோசனை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டது.ஒன்றினைந்த ஆலோசனை ஆணைக்குழுவில் இரு நாட்டு  வெளிவிவகார அமைச்சர்களும் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04