பின்தங்கிய பாடசாலை கட்டிட வசதிகளை சீர்படுத்த ஃபஷன் பக் பங்களிப்பு

Published By: Priyatharshan

15 Aug, 2016 | 03:00 PM
image

நாடளாவிய ரீதியில் 16 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டு சிறந்த சில்லறை ஆடை விற்பனை நிலையமாக விளங்கும் ஃபஷன் பக் நிறுவனமானது குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், சமீபத்தில் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள அல்-தாரிக் கனிஷ்ட பாடசாலையில் ஒரு புதிய வகுப்பிற்கான கட்டிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நிறுவனத்தின் தொடர்சியான சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட இந்ந வேலைத்திட்டமானது, முழுமையாக பூர்திசெய்யப்பட்டு, ஃபஷன் பக் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நிறுவனத்தின் உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் எஸ். எம். பஹாம், சிரேஷ்ட முகாமையாளர்  ரியாஸ் சஹப்டீன் மற்றும் சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி  ஒசத எரங்கொடவினால் பாடசாலை அதிபரான ஏ.பி.ஏ ஜவாஹிருக்கு கையளிக்கப்பட்டது.

எந்தவொரு பாடசாலையிலும் கல்வி கற்க தேவையான சூழல் அமைந்திருப்பது மிக முக்கியமானதொன்றாகும். கிராமப்புற பாடசாலைகள் துரதிஷ்டவசம் காரணமாக பல சமயங்களில் புறக்கணிக்கப்பட்டுவிடுகின்றன. 

தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சிறய அளவிலேனும் இவ்வாறான நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. 

“குழந்தைகளின் வாழ்வின் அவசியங்களை உணரும் பொறுப்பு எமக்கு உண்டு, மேலும் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நாம் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்நோக்குகின்றோம்” என ஃபஷன் பக்கின் இயக்குனர் திரு சபிஹிர் சுபியன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் 20 மில்லியன் ரூபாவுக்கும் மேலான தொகையை நாடுமுழுவதிலும் செயற்படுத்தப்படும் கல்வி, விளையாட்டு மற்றும் சமூக பொறுப்புணர்வுமிக்க பொது நடவடிக்கைகளுக்காக ஃபஷன் பக் செலவுசெய்து வருகின்றது.

அண்மையில் நாடுமுழுவதிலும் தொழில் வழிகாட்டல் திட்டங்கள் நடாத்தப்பட்டதுடன் அஞ்சல் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்ற பல்வேறு பொது இடங்களை புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளும், மாணவர்களுக்கு புலமைபரிசில்களும் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டதாக டாக்டர்  எஸ். எச். எம். பராஸ் தெரிவித்தார்.

1994 இல் தனது வர்த்தக செயற்பாடுகளை பங்காண்மை வர்த்தகமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த ஃபஷன் பக், தற்போது 16 காட்சியறைகளை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 15 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஃபஷன் பக், தற்போது 1250 ஊழியர்களை கொண்டுள்ளது.

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையகங்களில் ஒன்றாக திகழ்வதுடன் மாற்றமடைந்துவரும் வாழ்க்கைமுறைக்கு அமைவாக நவநாகரிக ஆடைகளை வழங்கிவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58