சஹ்ரானுக்கு 300 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது : தற்கொலைதாரியின் தந்தையான இப்ராஹிம் குறித்து ஜே.வி.பி. விரைவில் பதிலளிக்க நேரிடும் - வீரசேகர

Published By: Digital Desk 3

19 Mar, 2021 | 10:43 AM
image

(இராஜதுரை ஹஷான்)

நாம் குறிப்பிடும் கருத்துக்கள் வெற்று குண்டா அல்லது கை குண்டா என்பது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு வெகுவிரைவில் தெரிய வரும்.

தற்கொலை குண்டுத்தாரிகளின் தந்தையான இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செயற்பட்டமை குறித்து விரைவில் இவர் தெளிவுப்படுத்தலை முன்னெடுக்க நேரிடும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் சுயதொழில் புதிய சம்மேளன அலுவலகத்தை  நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் மேல்மாகண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் , மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவங்களில் இவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டின் பொதுச்சட்டம் குறித்த அண்மையில் இவர் சர்ச்சைக்குரிய கருத்தினை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்தும் விசாரணை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

மதத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படும் முரண்பட்ட கருத்துக்கள் அடிப்படைவாதத்துக்கு வழி வகுத்து அனை தீவிரவாதமாக தோற்றம் பெறும். ஆகவே எதனையும் அலட்சியப்படுத்த முடியாது.

தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு நாம் குறிப்பிடும் கருத்துக்கள் வெற்று வெடி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க விமர்சிக்கிறார். எமது கருத்துக்கள்  வெற்ற வெடியா அல்லது. கைக்குண்டா என்பது வெகுவிரைவில் அவருக்கு தெரிய வரும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தந்தை இப்ராஹிம். இவர்கள் ஊடாக பயங்கரவாதி சஹ்ரானுக்கு 300 இலட்சம்  நிதி வழங்கப்பட்டுள்ளதாக  அறியப்பட்டுள்ளது.

இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராவார். ஆகவே இவ்விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க வெகுவிரைவில் தெளிவுப்படுத்த நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33