போதைப்பொருள், ஆயுதங்களுடன் மூன்று இலங்கை படகுகளை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படை

Published By: Vishnu

19 Mar, 2021 | 09:54 AM
image

இந்திய கடலோர காவல்படை லட்சத்தீவுளுக்கு அருகே மூன்று இலங்கை மீன்பிடி படகுகளை தடுத்து, அதிலிருந்து பெரிய போதைப்பொருள் தொகையினை பறிமுதல் செய்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, படகுகளில் இருந்து ஹெராயின், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் 1,000 துப்பிக்கி ரவைகள் கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.

இந்திய கடற்படையின் கூற்றுப்படி, கடற்படையின் ஒரு டோர்னியர் விமானம் கடந்த எட்டு நாட்களாக அரேபியா கடலில் நகர்ந்து காணப்பட்ட ஏழு இலங்கை படகுகளை கண்காணித்து வந்தது. 

விமானம் தெற்கு கடற்படை கட்டளை மற்றும் இந்திய கடற்படைக்கு கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து படகுகளை தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கையை மேற்கொண்டது.

மினிகோய் தீவுகளுக்கு தென்மேற்கே 90 கடல் மைல் தொலைவில் வியாழக்கிழமை பிற்பகல் இப் படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

லட்சத்தீவுகள் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதேவேளை மார்ச் 7 அன்று, அங்கீகரிக்கப்படாத தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று இலங்கை படகுகள் இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்ததுடன், படகில் பயணித்த 12 பேரும் கைதுசெய்யப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30