ரஞ்சனின் ரிட் மனு வாதங்கள் நிறைவு : எழுத்து மூல சமர்ப்பணங்களுக்கு கால அவகாசம்

Published By: Digital Desk 4

19 Mar, 2021 | 06:31 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் எழுத்தானை ஒன்றினை பிறப்பிக்குமாறு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள ரிட் மனு தொடர்பிலான பரிசீலனையில், வாய் மொழி மூல வாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. 

இந் நிலையில் மனுதாரர் மற்றும் பிரதிவாதி தரப்பு சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களை எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இன்று உத்தரவிட்டது.

பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பித்து குறித்த மனுவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதியளிப்பதா, இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதியை தீர்மானிப்பதற்காக மனுவை மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை  நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரேயா ஆகியோர் அடங்கிய குழாம், ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை  தொடர்பில் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடைட்யை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடித்தது. 

முன்னதாக தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  கடந்த 2 ஆம் திகதி மனுத் தாக்கல் செய்துள்ளார். 

மேன் முறையீட்டு நீதிமன்றில்  அவர் இந்த ரிட் மனுவினை (எழுத்தாணை மனு) தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக தாக்கல் செய்துள்ள இம்மனுவில், பிரதிவாதிகளாக பாராளுமன்ற செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில்,  கடந்த ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக தனக்கு  4 வருட கடூழிய  சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான பின்னணியில், தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதி இல்லை என சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக கடந்த ஜனவரி 19 ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், எனினும் பாராளுமன்ற செயலர் இதுவரை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என  நம்பகரமான தகவல்கள் ஊடாக தான் அறிந்துகொண்டதாகவும் குறித்த மனுவில் ரஞ்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந் நிலையிலேயே தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவூடாக ரஞ்சன் கோரியுள்ளார்.

இம்மனு தொடர்பில் பிரதிவாதி தரப்பில்  சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேமுனி டி சில்வாவும் மனுதாரர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர்  வாதங்களை முன்வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46