சீனி மோசடியை மறைப்பதற்காகவே ரவி கருணாநாயக்கா கைது - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 4

18 Mar, 2021 | 08:30 PM
image

(எம்.மனோசித்ரா)

சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பின் மூலம் இடம்பெற்றுள்ள பாரிய மோசடியை மறைப்பதற்காக அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டிருக்கும் நாடகமே முன்னாள் நிதி அமைச்சர்  ரவி கருணாநாயக்கவின் கைதாகும். 

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் | Virakesari.lk

அத்தோடு மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாக்க சீனி மோசடியை மறைப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவ்விடயம் பேசுபொருளாகியுள்ளதால் நாட்டு மக்கள் சீனி மோசடியை மறந்துவிடுவார்கள்.

சீனி மோசடி மாத்திரமின்றி காடழிப்பு உள்ளிட்ட விடயங்களை மறைப்பதற்காகவும் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திலும் மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கார்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்தோம்.

எனினும் தற்போது மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்படாமல் ரவி கருணாநாயக்க போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளமை வெறும் நாடகம் மாத்திரமேயாகும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடைய சகாக்கள் இதனுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் என்று தற்போதைய அரசாங்கம் எதிர்கட்சியிலிருந்து போது கூச்சலிட்டது.

அவ்வாறெனில் ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை? ஆனால் தற்போது சீனி மோசடியை தடுப்பதற்காக தற்காலிக நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

மாகாணசபைத் தேர்தலை இலக்காக் கொண்டு இந்த கைது இடம்பெற்றுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டாம் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை. எனினும் இதனை விட பாரிய மோசடி சீனி மோசடியாகும். இதனை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47