அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து எதிர்க்கட்சி போராட்டம்

Published By: Gayathri

17 Mar, 2021 | 09:01 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை துரிதமாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதனை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் ஜனாதிபதி செயலக வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வெள்ளிக்கிழமை வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

கொவிட் பரவலின்போது அரசாங்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற நன்கொடை நிதியூடாகவேனும் இவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுமுறையில் வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுகின்றனர்.

அரசாங்கத்தின் சகாக்களின் ஹோட்டல் வர்த்தகத்திற்காக வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பில் உரிய அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை மறைப்பதற்காக புர்கா தடை உள்ளிட்ட பல விடயங்கள் அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்படுகின்றன.

மாறாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இனங்காண்பதில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுகிறது.

மறுபுறம் சீனி இறக்குமதி வரி சலுகையின் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. எமது ஆட்சி காலத்திலும் வரி சலுகை வழங்கப்பட்டது. எனினும், அதன் பயன் மக்களை சென்றடைந்தது. 

ஆனால், அரசாங்கம் அதன் சகாக்களுக்கு மாத்திரம் இதன் பயனை வழங்கியுள்ளது. மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53