கிரிக்கெட்டை மேம்படுத்த உரிய  நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பது அவசியம் - ரணதுங்க

Published By: Digital Desk 4

17 Mar, 2021 | 08:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பது எதிர்கால வெற்றிக்கு சாதகமாக அமையும். விளையாட்டுத்துறை அமைச்சரின் நிர்வாக பிரிவின் கீழ் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில்  விசேட பொறிமுறையினை செயற்படுத்த வேண்டும் என இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர்  அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

இலங்கை  உலக கிண்ணத்தை வென்று 25 வருட காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்துவம் வகையில்  பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை சர்வதேச அளவில் பிரபல்யமடையாத காலக்கட்டத்தில் கூட கிரிக்கெட் அணிக்காக அப்போதைய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. 25 வருடங்கள் கடந்தும் நாட்டு மக்கள் எம்மை மறக்கவில்லை.நாட்டுக்காக அர்பணிப்புடன் செயற்பட்ட காரணத்தினால் வெற்றியை பெற முடிந்தது.

நிர்வாக மட்டத்தில் சிக்கல்கள் காணப்பட்டாலும் அதனை இளம் வீரர்களிடம் வெளிப்படுத்தவில்லை. பல திறமையான பயிற்றுவிப்பாளர்கள் உள்ளார்கள் அவர்களக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து பயிற்றுவிப்பாளர்களை அழைத்து வருவதை தவிர்த்துக் கொள்ள  வேண்டும்.

கிரிக்கெட் அணியில் பல சிறப்பான செயற்பாடுகள் காணப்பட்டாலும் அதிருப்தியான செயற்பாடுகளும் மறுபுறம் காணப்படுகின்றன. கிரிக்கெட் விளையாட்டை சிறந்த முறையில் மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது எதிர்கால முன்னேற்றத்துக்கு  அவசியமானதாக அமையும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31