வெறுக்கத்தக்க கருத்தை வெளியிட்ட விஜயதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - முஜிபுர் 

Published By: Gayathri

17 Mar, 2021 | 05:34 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தன்னை தொடர்புப்படுத்தி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானதாகும் என்பதால் அவருக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

விஜயதாச ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களும் வெறுக்கத்தக்கவையாகும். அசாத் சாலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமெனில் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்னைப்பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் என்னை தொடர்புபடுத்தி அவர் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

உண்மையில் அவர் இது தொடர்பில் அறிந்திருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிப்பதை விடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் தெரிவித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திருக்க முடியும். 

எனினும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் இதற்கு முரணான கருத்துக்களையே முன்வைத்திருந்தார். 

தற்போது என்னுடைய நற்பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமைக்கான காரணம் முஸ்லிம் தலைவர்கள் தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ள கருத்தும் உண்மைக்கு புறம்பானதாகும்.  

அவர் அன்றைய எதிர்க்கட்சியுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் காரணமாகவே அமைச்சு பதவியை வழங்காதிருக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுவே உண்மையாகும். எனினும் அவர் இதனை வேறொரு பக்கம் திசை திருப்ப முயற்சிக்கிறார்.

விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். 

இவ்வாறான வெறுக்கத்தக்க கருத்துக்களை எவருக்கும் முன்வைக்க முடியாது. அசாத் சாலி வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துதான் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் , விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். புர்காவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ள கருத்தும் வெறுக்கத்தக்கதாகும்.

உண்மையில் அசாத் சாலி வெறுக்கத்தக்க கருத்துக்களை தெரிவித்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இது சாதாரணமானதாகும். 

எனினும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைக்கான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவரை கால வரையறையின்றி தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். அத்தோடு நாட்டில் கருத்து சுதந்திரம் தொடர்பில் காணப்படும் உரிமைக்கான அச்சுறுத்தலுமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முதலில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் அரசாங்கம் இதனை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக உள்ளமையே இதற்கான காரணம் ஆகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59