தலைமன்னார் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு பலர் அஞ்சலி

Published By: Digital Desk 3

17 Mar, 2021 | 04:13 PM
image

தலைமன்னார் பியர்  பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம்  தனியார் பஸ் ஒன்று ரயிலில் மோதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த  பாலசந்திரன் தருண் (வயது-14)  என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவனின் இல்லத்தில் இன்று புதன்கிழமை அஞ்சலி இடம் பெற்றது.

குறித்த மாணவனின் உடலுக்கு  பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக சிறுவனின் உடலுக்கு  தலைமன்னார் பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள்,அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச ஊழியர்கள்  என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சிறுவனின் உடல் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் இன்று புதன்கிழமை மாலை 03.00 மணியளவில் தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை விபத்திற்கு உள்ளான தனியார் பஸ்ஸின்  சாரதி மற்றும் குறித்த ரயில்  கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த இருவரையும் எதிர் வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52