ஊர்காவற்துறை பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமி 15 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன் காணமல் போயுள்ள நிலையில், சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்த போதே குறித்த சிறுமியின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள கிணறொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.