சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள் மீட்பு

Published By: Vishnu

17 Mar, 2021 | 08:07 AM
image

சீனாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வாசனைத் திரவியலங்களை சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தங்கள் தொழிற்சாலையின் உற்பத்திக்கு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் காகிதத்தை இறக்குமதி செய்யும் போர்வையிலேயே இவை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடமை சலுகையின் கீழ் வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் அவற்றை உற்பத்தி செய்து மறு ஏற்றுமதி செய்வதற்கும் இந்த தொழிற்சாலை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை பாணந்துரை பகுதியில் பதிவு செய்யப்பட்ட பொரலெஸ்கமுவ பகுதியில் அமைந்துள்ளது.

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40 அடி நீளமுள்ள கொள்கலனில் அதன் தொழிற்சாலையின் தயாரிப்புகளுக்குத் தேவையான பல்வேறு வகையான காகிதங்கள் அதில் இருப்பதாகக் கூறி மார்ச் 12 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு இந்த கொள்கலன் கொண்டு வரப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் கொள்கலனை  நேற்று ஆய்வு செய்தபோது, சுங்க அதிகாரிகள் பல்வேறு ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் முடி சாயங்கள் அடங்கிய சுமார் 03 மெட்ரிக் தொன் எடையுள்ள வாசனை திரவியங்களை சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் சேவைகள் பிரிவில் உள்ள சுங்க அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் சட்டவிரோத ஏற்றுமதியை மேற்கொண்ட தொழிற்சாலையின் பல அதிகாரிகள் மற்றும் கொழும்பு துறைமுகத்திலிருந்து அவற்றை அகற்ற முயன்ற பல நபர்கள் சுங்கத் திணைக்களத்துக்கு வரவழைக்கப்பட்டு அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55