கொஹுவளை சம்பவம் ; வர்த்தகரின் மரணத்திற்கா காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை இன்று

Published By: Vishnu

16 Mar, 2021 | 07:35 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆசிரி மாவத்தையில், எரிந்த காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட  இளம் வர்த்தகரின் ஆள் அடையாளம் உயிரியல் மூலக் கூறுகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இந் நிலையில் மரணத்துக்கான காரணத்தை கண்டரிய இன்று பிரேத பரிசோதனைகளை களுபோவில சட்ட வைத்திய அதிகாரி முன்னெடுக்கவுள்ளார்.

அரசின் மேலதிக இரசாயன பகுப்பாய்வாளர் ஜயமான்ன முன்னெடுத்த டி.என்.ஏ.  மரபணு சோதனைகளில், இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

கொஹுவளை - ஆசிரி மாவத்தையில் எரிந்த காருக்குள் இருந்து தீயில் கருகிய நிலையில் மீட்கப்ப்ட்ட சடலம், நுகேகொடை பகுதியில் வாகன உதிரிப் பாக வர்த்தக நிலையம் நடாத்தும் 33 வயதான வர்த்தகருடையது என கூறப்பட்டது.

இந்  நிலையில் மீட்கப்பட்ட சடலம் மற்றும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் வர்த்தகரின் தாய், தந்தையின் டி.என்.ஏ. மாதிரிகள்  பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த டி.என்.ஏ. மாதிரிகள் ஒத்துப் போயுள்ளதாகவும், அதன்படி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்ப்ட்ட 33 வயதான வர்த்தகரின் சடலமே அது என்பது அறிவியல் ரீதியாக நிரூபனமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந் நிலையிலேயே மரணத்துக்கான காரணத்தை கண்டரிய இன்று பிரேத பரிசோதனைகளை களுபோவில சட்ட வைத்திய அதிகாரி முன்னெடுக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27