சீனி இறக்குமதியால் ஏற்பட்ட நஷ்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐ.தே.க

Published By: Digital Desk 4

16 Mar, 2021 | 06:18 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சீனி இறக்குமதியால் ஏற்பட்டுள்ள 15.9 பில்லியன் நஷ்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று சதொச நிறுவனம் கூடிய விலைக்கு சீனியை பெற்றுக்கொண்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளது.

இதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் 15 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கடந்த வருடம் ஒக்டோபர் 13ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரியை 50 ருபாவில் இருந்து ரூபா 25சதம் வரை குறைப்பதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தே இந்த வரி குறைப்பை மேற்கொண்டது. கடந்த பெப்ரவரி 14ஆம் திகதிவரை இந்த வரிகுறைப்பு நடைமுறையில் இருந்தது. 

அத்துடன் சீனிக்கான வரிகுறைப்பின் மூலம் ஒரு கிலோ சீனியை 85 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றே அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கவில்லை. என்றாலும் வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு கிடைத்துவந்த லாபம் இல்லாமலாகியதால் 15.9பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு பாராளுமன்ற பொது மக்கள் நிதிக் குழுவுக்கு அறிவித்துள்ளது.

மேலும் சீனி வரிகுறைப்பின் நன்மை அரசாங்கத்துக்கு தேவையான சில வியாபாரிகளுக்கே சென்றிருக்கின்றது. வரிகுறைப்பு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த ஒரு நிறுவனம் மாத்திரம்  கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 26ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்திருக்கின்றது. 

ஆனால் இந்த நிறுவனம் அரசாங்கம் அறிவித்த 85ரூபாவுக்கு நுகர்வோருக்கு சீனியை பெற்றுக்கொள்ள தேவையான முறையில் விநியோகிக்காமல் அதனை பதுக்கி வைத்திருந்து, கூடிய விலைக்கே விநியோகித்துள்ளது.

அத்துடன் சதோச நிறுவனம் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி ஒரு கிலோ சீனி 127.49சதம் அடிப்படையில் 700 மெட்ரிக் தொன் பெற்றுக்கொண்டு 85 ரூபாவுக்கு விற்பனை செய்திருக்கின்றது.

அதேபோன்று 121 ரூபா, 92 ரூபா, 110ரூபா என்ற அடிப்படையில் சதோச ஒக்டோபர் மாதம் சீனி கொள்வனவு செய்து 85ருபாவுக்கே விற்பனை செய்திருக்கின்றது. இவ்வாறு கூடிய விலைக்கு பெற்றுக்கொண்டு குறைந்த விலைக்கு சீனி விற்பனை செய்திருப்பதன் மூலமும் மக்களின் பணமே விரயமாகி இருக்கின்றது.

அதனால் சதோச நிறுவனம் 85ரூபாவுக்கு சீனியை யாருக்கு அதிகம் விற்பனை செய்தது என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.

வரிகுறைப்பினால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நஷ்டத்தை அரசாங்கம் பொது மக்களிடமிருந்து அறவிடாமல், இதன் மூலம் லாபம் பெற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04