சமுர்த்தி தொடர்பான இராஜாங்க அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள ஆலோசனை

Published By: Digital Desk 4

15 Mar, 2021 | 04:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமுர்த்தி பயனாளர்களை கடன் மற்றும் நிவாரண அடிப்படையில் வாழும் தரப்பினர்களாக மாத்திரம் வரையறுக்காமல் அவர்களை முயற்சியாளர்களாக சுயமாக முன்னேற்றமடையும் தரப்பினராக  மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தவது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமுர்த்தி தொடர்பான இராஜாங்க அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

சமுர்த்தி, மனைபொருளாதார, நுண்நிதி சுயத்தொழில், தொழில் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டமிடல்  தொடர்பிலான பேச்சுவார்த்தை பிரதமர் தலைமைவில் நேற்று நிதியமைச்சில் இடம் பெற்றது.

இதன் போது கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமுர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்பவர்களில் இதுவரையில் நிவாரண கொடுப்பனவுகளை  பெற்றுக் கொள்ள தேவையற்றவர்களை நீக்குவது தொடர்பில் முறையான வழிமுறைகள் ஏதும் கிடையாது.

சமுர்த்தி பயனாளர்கள் சுயமாகவே சமுர்த்தி திட்டங்களில் இருந்து வெளியேற இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கு 4 சதவீத நிவாரண வட்டி வீதத்தில் 5 இலட்சம் கடனுதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் 17 இலட்சத்து 62 ஆயிரத்து 655 குடும்பங்களை சேர்ந்தோர் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெறுகின்றனர். இதற்காக மாத்திரம் ஒரு வருடத்துக்கு 53000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமான 25000 சமுர்த்தி  பெண் முயற்சியாளர்கள் சுயமாக முன்னேற்றமடையும் செயற்திட்டம் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வருட இறுதியில் 500 உற்பத்தி கிராமங்களை நாடு தழுவிய ரீதியில் உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.50 உற்பத்தி கிராமங்கள்  உருவாக்கத்திற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

என சமுர்த்தி , மனைப்பொருளாதார , நுண்நிதி, சுயதொழில் இராஜாங்க அமைச்சின் திட்டங்களை இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெளிவுப்படுத்தினார்.

விசேட தேவையுடையவர்களை இனங்கண்டு அவர்களை பொருளாதார மட்டத்தில் பலப்படுத்தவும் மற்றும் குருதி அழிவுச்சோகை (தெலிசீமியா) நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40