கல்வி திட்டங்கள் குறித்த ஜீவன் தொண்டமானின் யோசனைகள் வரவேற்கத்தக்கது: சீதா அரம்பேபொல

Published By: J.G.Stephan

15 Mar, 2021 | 11:46 AM
image

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்ட தொண்டமான் குடும்பத்தாருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தினுடைய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்று அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் 14.03.2021 அன்று இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிள்ளைகளின் வாழ்வு மேம்படவேண்டும் என்ற நோக்கில் சிரேஷ்ட தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் தொண்டமான் குடும்பத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்டனர். இதற்காகவே தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கினர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமானும்  தற்போது சரியான வழியை தெரிவு செய்துள்ளார். கல்விதுறை மேம்படாவிட்டால் சமூகம் மேம்படாது. எனவே, கல்வியை ஒதுக்கிவிட்டு அபிவிருத்திகள் செய்தால் அவை பயன்தராது. அந்தவகையில் கல்வி மேம்பாட்டுக்காக ஜீவன் செயற்படுவது சிறப்பு.  கல்வி கற்றால் அதன்மூலம் கிடைக்கும் அறிவை எவராலும் களவாட முடியாது. கல்வியால் சாதிக்க முடியும். எனவே, கல்வி திட்டங்கள் தொடர்பில் ஜீவன் தொண்டமான் முன்வைக்கும் யோசனைகளை நாம் மதிக்கின்றோம். அவற்றை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதேவேளை, தோட்டப்பகுதிகளில்  உள்ள சுகாதார  வசதிகள் தொடர்பிலும் ஜீவன் தொண்டமான் கவனம் செலுத்துவார் என நம்புகின்றோம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்பட்டுவிட்டால் எவருக்கும் அடிபணியவேண்டிய நிலை ஏற்படாது.

மாணவர்களும் கல்வியை இடைநடுவில் கைவிடாது, பயிற்சி நிறைவுபெறும் வரை கற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொழில் வாய்ப்புகள் கிடைத்தால் இப்பகுதி பிள்ளைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56