மியன்மாரின் பல பகுதிகளில் இராணுவ சட்டம் அறிவிப்பு ; இதுவரை 126 பேர் பலி

Published By: Vishnu

15 Mar, 2021 | 11:37 AM
image

இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களின் போது மியான்மர் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 38 பேரைக் கொலை செய்ததாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் உள்ள பல நகரங்களில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் தினமும் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதால் 126 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை தன்னிச்சை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினால் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.

நேற்யை தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் யாங்கோனின் ஹ்லிங்தயா நகரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஹிலிங்தாயா மற்றும் அண்டை நகரான ஸ்வேபிதர் பகுதிகளில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து திங்களன்று நகரத்தில் மேலும் நான்கு நகரங்களும் இராணுவ சட்டம் அறிவிக்கப்பட்டன.

இந்த சட்ம், யாங்கோன் பிராந்திய கட்டளையின் தளபதியான இராணுவத்தை, நகரங்களில் அனைத்து நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களையும் பயன்படுத்த அனுமதிக்கிறது, இது வரும் நாட்களில் எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை முன்னெடுக்கும்.

ஹிலிங்தாயாவில் அமைந்துள்ள சீனாவுடன் இணைக்கப்பட்ட தொழிற்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டு, தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர் என்று மியான்மரில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் இராணுவ அரசாங்கத்துடன் சீனா ஒரு நட்பு ரீதியான உறவினை முன்னெடுத்துள்ளமையினால் இந்த தொழிற்சாலைகள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

யாங்கோனுக்கு வடகிழக்கில் உள்ள பாகோவில் ஒரு பொலிஸ் அதிகாரி இறந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாக இராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு தொலைக்காட்சியில் அறிவித்தது.

இதனிடையே இந்த வன்முறையை உடனடியாக நிறுத்தவும், மியான்மர் மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இராணுவம், ஆட்சி அதிகாரத்தை திருப்பித் தரவும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் என மியான்மருக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52