மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் எமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - செஹான் சேமசிங்க

Published By: Digital Desk 3

15 Mar, 2021 | 11:02 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பொதுஜன பெரமுன பிரதான கட்சியாகவுள்ளது. இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கூட்டணியாகவே போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சுதந்தி கட்சியினர் தனித்து செல்ல முன் உள்ளுராட்சி மன்ற பெறுபேற்றை மீட்டிபார்க்க வேண்டும் என மனை பொருளாதார, நுண்நிதி,சிறு கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களின் ஜனநாயக உரிமையை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மாகாண சபை தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பொறுப்பு கூற வேண்டும். கூட்டணியாகவே மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.இத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அதிக மாகாண சபைகளை கைப்பற்றும்.

கூட்டணியில் இருந்துக் கொண்டு சுதந்திர கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளன.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பிறகே இவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள்.

குண்டுத்தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சியினராக செயற்பட்ட காலத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். கூட்டணியமைத்து ஆட்சியமைத்துள்ளதால் உண்மையை பொய்யென குறிப்பிட முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.சுதந்திர கட்சியினர் தனித்து செல்ல முன் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கிடைக்கப்பெற்ற பெறுபேற்றை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50