நேற்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 3,108 பேர் கைது

Published By: Vishnu

15 Mar, 2021 | 11:14 AM
image

நாடு முழுவதும் நேற்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 3,108 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்தாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,112 நபர்களும், 454 வாகன சாரதிகளும் கைதுசெய்யப்பட்டவர்களில் உள்ளடங்குவர்.

அதேநேரம் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காக 469 நபர்களும், கலால் கட்டளைச் சட்டத்தை மீறியதற்காக 523 நபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ இவ்வாறான விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான நாட்டை உறுதி செய்வதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஞாயிறுக்கிழமை 4 மணித்தியாலங்கள் பொலிஸாரால்  முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 3000 இற்கும் அதிக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 5000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நாடளாவிய ரீதியில் விஷேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சுற்றி வளைப்புக்களில் 16 524 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதுடன் , 3108 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதற்கமைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 1112 சந்தேகநபர்கள் , தேடப்பட்டுவந்த 108 சந்தேகநபர்கள், வெவ்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் 639 சந்தேகநபர்கள், போதைப்பொருளுடன் தொடர்புடைய 469 சந்தேகநபர்கள், சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் 523 சந்தேகநபர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 454 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவை தவிர வெவ்வேறு போக்குவரத்து விதிகளை மீறிய நபர்கள் தொடர்பில் 5380 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

தொடர்ச்சியாக இது போன்ற விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படும். எனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அது தொடர்பில் அறிந்திருந்தால் உடனடியாக நீதிமன்றத்தில் அல்லது பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும். அவ்வாறில்லை என்றால் பொலிஸாரால் கைது செய்யப்படும்பட்சத்தில் அவர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்படுவர்.

போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புக்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதன் போது கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

வாராந்தம் அல்லது இரு வாரங்களுக்கொருமுறை இவ்வாறான சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு அச்சமின்றி வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்காகவே இலங்கை பொலிஸ் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. மக்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21