ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவதில் தவறில்லை

Published By: Robert

15 Aug, 2016 | 09:02 AM
image

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தில் நான்கில் மூன்று பங்­கினை தானே நிறைவு செய்­துள்­ள­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ எஞ்­சி­யி­ருந்த இறுதி ஒரு பங்­கினை மட்­டுமே நிறைவு செய்­த­தாகவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

மேலும் கடந்த அர­சாங்­கத்­தினால் சிதைந்த இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­ப வும் புத்­தெ­ழுச்சி பெற செய்­வ­தற்கும் ஐக்­ கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதில் எவ்­வி­த­மான தவறும் இல்லை எனவும் தெரி­வித்தார்.

மீரி­கம பகு­தியில் இடம்­பெற்ற மக்­கள சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நான் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலப்­ப­கு­தி­யி­லேயே யுத்­தத்தின் மூன்று பங்கு நிறை­வ­டைந்து விட்­டது. மிகு­தி­யி­ருந்த சொட்ப பகு­தி­யி­னையே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நிறைவு செய்­தி­ருந்தார். அவ்­வா­றி­ருக்­கையில் சிலர் யுத்­தத்தை கடந்த அர­சாங்கம் நிறைவு செய்­த­மை­யி­னா­லேயே மீண்டும் ஆட்சி செய்­வ­தற்­கான அதி­கா­ரத்தை மக்கள் வழங்­கினர் என்றும் யுத்­தத்தின் நாய­க­னாக முன்னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜ­பக்ஷ சித்­திரிக்­கவும் முனைந்­தனர்.

உண்­மை­யாக விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான யுத்­தத்தின் வெற்­றிக்கு ஐக்­கிய தேசிய கட்­சியும் ஒரு பங்கு வழங்­கி­யி­ருந்­தது. நான் ஆட்­சிக்கு வரும் முன்­னரும் அதற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் நான்கில் மூன்று பங்கு யுத்தம் நிறை­வு­பெற்று விட்­டது என்­பதை மக்கள் புரிந்­துக்­கொள்ள வேண்டும். நாம் மேற்­கொண்ட முயற்­சி­களின் பின்­னரே யுத்­தத்தை நிறைவு செய்ய அவரால் முடிந்­ததே தவிர தனித்து அவரால் யுத்­தத்தை ஒரு­போதும் வெற்­றிக்­கொண்­டி­ருக்க முடி­யாது. அத்­தோடு யுத்­தத்­திற்­கான ஆயு­தங்­களை எமது அர­சாங்­கமே கொள்­வ­னவு செய்­தி­ருந்­தது.

எனவே நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் யார் வேண்டுமானாலும் இணைந்து செயற்பட தயாராக உள்ளேன். நாட்டின் நன்மைக்காக என்னை அர்ப்பணித்து செயற்பட தயாராகவுள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17