இலங்கை மீதான நம்பிக்கையை மியன்மார் மக்களும் இழந்து விட்டனர்: கயந்த கருணாதிலக

Published By: J.G.Stephan

14 Mar, 2021 | 03:17 PM
image

(எம்.மனோசித்ரா)
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டுக்கு மியன்மாருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமையால், சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு மியன்மார் மக்கள் இலங்கை மீது நீண்ட  காலமாகக் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மியன்மாரில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடம்பெறுகின்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளை உலக நாடுகள் அனைத்தும் நிராகரித்துள்ளதோடு, அவற்றுக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அந்நாட்டில் வீதிக்கிறங்கி போராடிய நிராயுதபாணியான பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து இராணுவ ஆட்சியை ஏற்றுக் கொண்டுள்ளதால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மியன்மார் மக்களுக்கு இலங்கை மீது காணப்பட்ட நீண்ட கால ஸ்திர நம்பிக்கை அற்றுப்போயுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் இராஜதந்திர கொள்கைகளிலுள்ள குறைபாடுகளும் தெளிவாகியுள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26