வலுவாகிறது இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை?: வடமாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வும் உள்ளீர்ப்பு

Published By: J.G.Stephan

14 Mar, 2021 | 02:35 PM
image

(ஆர்.ராம்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் இணை அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையானது திருத்தப்பட்டு முன்னரை விடவும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக 15அவதானிப்புக்கள் மற்றும் 16பரிந்துரைகளுடன் பிரித்தானியா தலைமையில் இணை அனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட ‘பூச்சிய’ வரைவானது முறைசாரா கூட்டங்களில் மாற்றங்களுக்கு  உட்படுத்தப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட பூச்சிய வரைவின் அவதானிப்புக்களின் ஆறாவது பந்தியில், “பொறுப்புக்கூறலை முன்னேற்றும் நோக்கத்துடன்,  இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றம் துஷ்பிரயோகங்கள் என்பன தொடர்பான சான்றுகளைப் பாதுகாப்பது, பகுப்பாய்வு செய்வது என்பவற்றின் முக்கியத்துவதை உணர்ந்து, தகவல்களையும் சான்றுகளையும் திரட்டிப் பகுப்பாய்வு செய்து பாதுகாப்பதற்கும், பாரிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றின் பொறுப்புக் கூறலுக்கான எதிர்காலத்திட்டங்களுக்கான சாத்தியமான மூலோபாயங்களைத் தயாரிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உயிர்பிழைத்தோருக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கும், உரிய நியாயாதிக்கத்தைக் கொண்ட உறுப்பு நாடுகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தின் வல்லமையைப் பலப்படுத்தத் தீர்மானித்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பந்தியில் “மனித உரிமை மீறல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய, ஆதாரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து. பாதுகாப்பதற்கு” என்று திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ‘புதிதாக சேகரித்தல்’ என்ற பதம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆதாரங்களை மேலும் திரட்டிக் கொள்வதற்கான எல்லையை பாரந்துபடச்செய்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த திருத்தத்தினை மேற்கொள்வதில் இழுபறியான நிலைமைகள் காணப்பட்டன. திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் சாட்சியங்களை புதிதாக சேகரிப்பதற்கு மேலும் நிதித்தேவை காணப்படுவதாகவும் அதனை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அவுஸ்திரேலியா இந்தச்செயற்பாட்டிற்கு தேவையான 2மில்லியன் டொலர்கள் வரையிலான நிதியை வழங்குவதற்கு முன்வந்ததையடுத்து திருத்தம் இறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஆறு முதல் பத்து பேர் கொண்ட கட்டமைப்பொன்று ஐ.நா.உயர்ஸ்தானிகரால் நியமிக்க முடியும் என்பதோடு அதில் சட்டத்தரணிகள், ஆய்வாளர்கள், தகவல் முகாமை நிபுணர்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்  உள்ளடக்கப்படவுள்ளனர்.

அதேநேரம் அமெரிக்கா “மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள்” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “மனித உரிமை மீறல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குற்றங்கள்” என்ற சொற்தொடர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாக்களை கட்டாய தகனம் தொடர்பான விடயத்தை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கமும், நட்பு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் பிரித்தானியா உள்ளிட்ட அனுசரணை நாடுகளின் குழு மற்றும் சில திருத்தங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, 7ஆவது அவதானிப்பு பந்தியில் “இலங்கை அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, ஜனநாயக ஆட்சி, முக்கிய அமைப்புக்களின் செயற்பாடுகள் மீது சுதந்திரமான மேற்பார்வை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது உள்ளடங்கலாக உள்ளாட்சி அமைப்புக்களை மதிக்குமாறு அரசை ஊக்குவித்து, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கு அமைவாக அனைத்து மாகாணசபைகளும் செயற்திறனுடன் இயங்குவதை உறுதி செய்யுமாறு ஊக்குவித்து” என்று பூச்சிய வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்பந்தியானது அதிகாரப் பகிர்வு தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுமாறும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதன் மூலமும், அனைத்து மாகாணசபைகளும் 13 ஆவது திருத்தத்தின்படி திறம்பட செயற்பட முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலமும், “உள்ளாட்சி நிர்வாகத்தை மதிக்க வேண்டும்” என்றும் இலங்கை அரசிடம் கோரப்பட்டுள்ளது. அத்துடன் “வடக்கு மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு” என்றும் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் நல்லிணக்கம், மோசமான மனித உரிமை மீறல்களுக்கான நீதியை அடைவது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம், வாய்மொழி அறிக்கையையும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எழுத்து மூலமான அறிக்கையையும்ரூபவ் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்க வேண்டும் அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்ஸ்தானிகர் ஆணையாளர் அறிக்கையை சமர்ப்பிக்கும் வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு செப்ரெம்பரில், புதிய தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட பூச்சிய வரைவு மென்மைப்படுத்தப்படுகின்ற போதும், இலங்கை தொடர்பான புதிய வரைவு வழக்கத்துக்கு மாறாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வரைவினை இறுதி செய்து சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16