உலகின் அதி வேக மனிதர் ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் மூன்றாவது தடவையாகவும் தங்க பதக்கத்தை சுவீகரித்தார்.