தமிழ் அர­சியல் கைதி­களின் விட­யத்­திற்கு விரைவில் தீர்வு

19 Nov, 2015 | 11:03 AM
image

தமிழ் அர­சி யல் கைதி­களின் விட­யத்­திற்கு விரைவில் நிரந்­தரத் தீர்வு கிடைக்­கு­மென தெரி­வித்­துள்ள அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் நாட்­டி­லுள்ள சிறைச்­சா­லை­களில் பல்­வேறு சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.



சிறைச்சாலைகள் விவகார அமைச்சராக நேற்று பத­வி­யேற்ற பின்னர் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார்.
நாட்­டி­லுள்ள சிறைச்­சா­லை­களில் பல்­வேறு குறை­பா­டுகள் காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. அவை தொடர்பில் விசேட கவ­ன­மெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
நாடா­ள­விய ரீதியில் உள்ள சிறைச்­ச­ாலை­களில் பல்­வேறு சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இது­தொ­டர்பில் எனது தலை­மையில் ஜனா­தி­பதி,பிர­தமர் உள்­ளிட்­டோ­ருடன் விசேட கலந்­து­ரை­யா­டல்களை மேற்­கொள்­ள­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன்.
மேலும் சிறைக்­கை­தி­களும் மனி­தர்­களே என்­பதை நெஞ்­சில்­நி­றுத்தி அவர்­களின் அடிப்­படை உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளித்து அவர்­களின் தேவைப்­பா­டுகள் தொடர்­பிலும் அதி­கூ­டிய கவ­ன­மெ­டுக்­க­வுள்ளேன்.
வெலிக்­கடைச் சிறைச்­சாலை உட்­பட தலை­ந­க­ரினுள் காணப்­படும் சிறைச்­சா­லை­களை இட­மாற்­று­வது குறித்து பல்­வேறு யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவை குறித்து உரிய ஆராய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு அத­ன­டிப்­ப­டையில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.
அதே­வேளை தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு எவ்­வா­றான தீர்வு வழங்­கப்­ப­ட­வுள்­ளது என வின­வி­ய­போது,
தற்­போது விடு­த­லையை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி­களை நான் நேரில் சென்று பார்­வை­யிட்­டி­ருந்தேன். அவர்­களின் விடு­தலை தொடர்­பாக நான் ஜனா­தி­ப­தி­யி­டத்­திலும், பிர­த­ம­ரி­டத்­திலும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தேன்.
அத­ன­டிப்­ப­டையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்ளார். குறிப்­பாக அவர்­க­ளுக்கு பிணை வழங்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் உத்­த­ர­விட்­டுள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு பிணை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஊடாக தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58