வவுனியா விபத்தில் இளைஞன் படுகாயம்

Published By: Digital Desk 2

12 Mar, 2021 | 03:52 PM
image

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12) காலை 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியில் இருந்து வைரவபுளியங்குளம், புகையிரத வீதி நோக்கி திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை, குருமன்காடு சந்தியில் இருந்து வவுனியா நகரம் நோக்கி புகையிரத வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயது மதிக்கதக்க இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பிக்கப் ரக வாகனம் காயமடைந்தவரை ஏற்றிக் கொண்டு விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து உடனடியாகவே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55