எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி யாழில் மாபெரும் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  

தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் வடகிழக்கில் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல்கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல முக்கிய கோரியை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள், பல்கலைக்கழகத்தினர் சமூகவியலாளர்கள் ஒன்றிணைந்து இராணுவ மயமாக்கல் மற்றும் பௌத்தமத சின்னங்கள் அமைப்பது தொடர்பாக, யாழ். பொதுநூலகத்தில் இன்று கலந்துரையாடினார்கள். 

இந்த கலந்துரையாடலிலேயே மேற்படி மக்கள் போராட்டத்திற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.