சத்தியாக்கிரகத்தில் பொதுபல சேனா, பௌத்த பிக்குகள் சங்கம்

Published By: Digital Desk 4

11 Mar, 2021 | 08:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பு உட்பட  பௌத்த அமைப்புக்களை தடை செய்ய முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுபல  சேனா அமைப்பினரும்,பௌத்த பிக்குகள் சங்கத்தினரும் ஒன்றினைந்து சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டார்கள்.

No description available.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் கொள்கை திட்டங்களை மார்ச் 11 என பெயர்குறிப்பிட்டு அரசாங்கத்திடம் கையளித்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பு செயற்பட்ட காலக்கட்டத்தில் இராணுவத்தின் உளவாளிகளாக  செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரான்  உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு  யார் ஆயுதம், நிதியுதவி வழங்கியது, வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீள பெற்றுக் கொள்ளப்பட்டதா, இல்லையாயின் அந்த ஆயுதங்களுக்கு என்னவாயிற்று.

ஏப்ரல் 21 குண்டுத்தாகுதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு அரசியல் நோக்கங்களை விடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் 2016. நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதின், அனாஸ் நசீர், முஜ்பூர் ரஹ்மான்,தேசிய சுரா கவுன்சிலின் தலைவர் தரிக் மொஹமட், இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.எம் அலிம், ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, முன்னாள் ஆளுரநர் ஹிஸ்புல்லா, ஆகியோருக்கு எதிராக முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

No description available.

கட்டுவாப்பிடிய தேவஸ்தானத்தின் குண்டுதாரியின் மனைவியான சாரா உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில் முறையான விசாரணை எடுக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கான விசாரணை  விசேட மேல்நீதிமன்றம் ஊடாக நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

No description available.

பொதுபல சேனா அமைப்பினை தடை செய்யவும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் ஆணைக்குழு முன்வைத்துள்ள யோசனை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை முன்னெடுக்க தயாரான காரணிகளை பயங்கரவாதி சஹ்ரான் குறிப்பிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அக்காரணிளாவன,

No description available.

அல்லாஹ் கடவுளுக்கான கடமைகளில் ஒன்றாக,கடவுளால் படைக்கப்பட்ட இஸ்லாமிய இராஜ்ஜியத்தில் சிரியாவில் முஸ்லிம் சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டைக்கு பழிவாங்கும் வகையில்,நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் முஸ்லிம் பள்ளியில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில்,என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கும் இலங்கைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

No description available.

இனம் ,மத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள்  செயற்படுகின்றமையினால் தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது. ஆகவே இவ்வாறான அரசியல் கட்சிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

ஆகவே மேற்குறிப்படப்பட்டுள்ள அனைத்து யோசனை குறித்தும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59