அம்மன் சிலையைக் கடத்திய மூவர் கைது : மற்றொருவருக்கு பொலிஸ் வலைவீச்சு.!

Published By: Robert

14 Aug, 2016 | 11:34 AM
image

பொகவந்தலாவ - லோய்னோன் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் காணாமல் போன அம்மன் சிலை, நேற்று இரவு 09.00 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

அத்துடன், மற்றும் ஒருவரைக், கைதுசெய்யும் நோக்கில் பொகவந்தலாவ பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி லோய்னோன் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த, 03 அடி உயரம் கொண்ட, ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை காணாமல் போனதாக, கோயில் நிர்வாகம் கடந்த 01ஆம் திகதி ஜூலை மாதம் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர். 

இந்த முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொகவந்தலாவ பொலிஸார் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பலாங்கொட பின்னவல - தெதனகல கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த அம்மன் சிலையை மீட்டனர். 

மேலும், அம்மன் சிலையினை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர். 

அத்துடன், இந்த அம்மன் சிலை, கடந்த 5 நாட்கள் ஜேப்பல்டன் காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பிறகு பின்னவல - தெதனகல தோட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொட - பின்னவல - தெதனகல கிழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இருவரும் பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பூசகர் ஒருவருமாவர். 

இவர்களை, இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

எஸ்.சதீஸ்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51