பாரதிய ஜனதா கட்சியின் செயற்பாடுகள் இலங்கையில் இல்லை: ரமேஷ் பத்திரண

Published By: J.G.Stephan

09 Mar, 2021 | 06:08 PM
image

(எம்.மனோசித்ரா)
இலங்கையில் நாம் அறிந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே மக்கள் இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலார் சந்திப்பில், கடந்த வாரம் யாழில் 'இலங்கை பாரதிய ஜனதா கட்சி' என்ற கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில் கேட்கப்பட்ட போதே இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் அந்நாட்டு அரசியல்வாதியொருவரால் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கையிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான சட்டரீதியான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே காணப்படுகிறது.

நாம் அறிந்த வகையில் இலங்கையில் அவ்வாறானதொரு கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே நாட்டு மக்கள் இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32