இரணைதீவில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானமில்லை: அரசாங்கம்  

Published By: J.G.Stephan

09 Mar, 2021 | 05:27 PM
image

(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார். இரணைதீவு தொடர்பில் சுகாதார அமைச்சு தொழிநுட்ப ரீதியாக ஆராயந்து தீர்மானமெடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இரணைதீவு பிரதேசத்தில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்திலே அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே இரணைதீவு தொடர்பில்  சுகாதார அமைச்சினால் தொழிநுட்ப ரீதியாக ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால், 'கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக' அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து எதிர்க்கட்சி உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினரால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோடு , இரணைதீவு மக்களால் எதிர்ப்பும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27