தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் - சீமான்

Published By: Digital Desk 2

09 Mar, 2021 | 07:17 PM
image

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் துப்பாக்கியால் சுட்டால் முதல்வர் பதவியை இராஜினாமா செய்வேன் என அக்கட்சியின் தலைவரான சீமான் தெரிவித்திருக்கிறார்.

திர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி என்று தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

இதில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கு பற்றி கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது.

புரட்சிகர சமூகத்தைப் படைக்க இந்த அரசியலை முன்னெடுக்கிறோம். ஊழல் தெரிகிறது. இலஞ்சம் தெரிகிறது. முறையற்ற நிர்வாகம் தெரிகிறது.

அதை தடுக்க முடியவில்லை. வெளிப்படையாக அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகமாக உள்ளது. மக்களுக்கான அரசை நிறுவுவதற்கு இந்த அரசியலை முன்னெடுக்கிறோம். நாங்கள் உறுதியாக வெல்வோம். உலகில் மக்கள் அவரவர் தாய் மொழியில் பேசுகின்றனர்.

நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆதி மனிதன் தமிழன் தான். ஆதி மொழியும் தமிழ் தான். தமிழ் எங்கள் மூச்சு மொழி.

எங்கள் உயிர். அது எங்கள் தாய். எங்கள் அடையாளம்.. அந்த மொழி அழிந்து கொண்டிருக்கிறது. எங்கள் தமிழை அழியாமல்  செய்ய நாங்கள் உறுதியாக வெல்வோம். மக்கள் எங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

உலக பொதுவிற்கான அரசியலை முன்னெடுக்கிறோம். அரசியல் என்பது அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி நிறுத்தப்பட்டுள்ளது. 

கொர்ப்பரேட் கம்பனிகள் போல் மாற்றப்பட்டுள்ளன. சில குடும்பங்களில் சொந்த சொத்தாக மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த நிலத்தில் இருந்த அரசியலிலிருந்து நேர் எதிர் திசையில் நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது. கடந்த தேர்தல்களில் பணமழை பொழிந்தது. கூட்டணி இணைந்தது. எனினும் 17 லட்சம் பேர் நமக்கு வாக்களித்தனர்.

எத்தனை 'ஜி: வந்தாலும், கஞ்சி விவசாயி தான் ஊற்றவேண்டும். விவசாயி வாழ முடியாவிட்டால் அது நாடு இல்லை சுடுகாடு. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்கினால் அடுத்தநாளே இராஜினாமா செய்வேன். நாம் கருத்தியல் போரை தொடங்கி உள்ளோம் அதைக் கூறி ஓட்டை பெறுவோம்.'' என்றார்.

234 தொகுதிகளில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தியுள்ளது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17