தேசிய பாதுகாப்பு கல்லூரி குறித்த அரசாங்கத்தின் தீர்மானம்

Published By: J.G.Stephan

09 Mar, 2021 | 03:23 PM
image

(எம்.மனோசித்ரா)
தேசிய பாதுகாப்பு கல்லூரியை ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரமளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கல்லூரியை பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவுவதற்காக இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டத்திற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2019 டிசம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் 2021 மே மாதம் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதுடன், 11 மாத கால முழுநேரப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு என்.டி.சி. தகைமைச் சான்றிதழை வழங்குவதற்கான சட்ட ரீதியான அங்கீகாரமும் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளில், குறித்த நாடுகளின் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளில் பாடநெறிக்குச் சமாந்தரமாக தேசிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விஞ்ஞான இளமானி அல்லது தத்துவமானி பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதனால், குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு கல்லூரியில்  கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகரிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right