தொழில் முடிவுறுத்தல், கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

Published By: J.G.Stephan

09 Mar, 2021 | 03:15 PM
image

(எம்.மனோசித்ரா)
தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் சட்டம் , கைத்தொழில் பிணக்குகள் சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்படும் தீர்ப்புக்களுக்கு எதிராக மேன்முறையீடு, மீளாய்வு மற்றும் ரிட் மனு தாக்கல் செய்யும் போது பிணைத் தொகை செலுத்தும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊழியர்களின் தொழிலை முடிவுறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் தொழில் வழங்குநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறே, தொழில் வழங்குநர் மற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்படும் கைத்தொழில் பிணக்குகளுக்கு துரிதமான நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இரு சட்டங்களின் கீழ் ஊழியர்களுக்கு சார்பாக கட்டளைகளை பிறப்பிக்கும் போது குறித்த கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காக ஒருசில தொழில் வழங்குநர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையின் கீழ் குறித்த கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 15 - 20 வருடங்கள் செல்வதாகவும், இக்காலப்பகுதியில் தொழில் வழங்குநர்களின் இறப்பு, வெளிநாடுகளுக்குச் செல்லல், நீதிமன்றத்தில் ஆஜராகாமை மற்றும் கம்பனியை மத்தியஸ்தம் செய்தல் போன்ற காரணங்களால் ஊழியர்கள் எதிர்பார்க்கின்ற நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு இயலாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49