தமிழகத் தேர்தல்“சக்கர வியூகம்”

Published By: Gayathri

08 Mar, 2021 | 10:13 PM
image

எம்.காசிநாதன்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டது. தலைவர்களின் பிரசாரங்கள் தொடங்கி விட்டது. 

தேர்தல் நடத்துவதற்கான விதிகள் அமுலுக்கு வந்து விட்டன. அரசியல் கட்சிகளின் அணிகள்கூட ஏறக்குறைய அமைந்து விட்டன. 

ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. கொடுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பரபரப்பான- திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. 

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மார்ச் 12 ஆம் திகதி குறிக்கப்பட்டு விட்டது. மார்ச் 22 ஆம் திகதியுடன் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான இறுதிக் கெடு முடிவு பெறுகிறது.

ஆட்சியிலிருக்கும் கட்சி “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற ஒரு பிரசாரத்தை குறிப்பாக அரசு பணத்தில் நடத்தியிருக்கிறது என்றால் தமிழக தேர்தல் வராலற்றில் அ.தி.மு.க. தான் முதலில் இப்படி செய்திருக்கிறது. 

அதேபோல் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு 12 ஆயிரம் கோடி ரூபா கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில்- வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ளீட ஒதுக்கீடு என்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாவது,  தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரில் வலுவான அணியாக நிற்க அ.தி.மு.க.வை தயார் செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. 

2019 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்வி இதுபோன்ற“தேர்தல் சலுகை அறிவிப்புகளுக்கு” வித்திட்டுள்ளது என்றாலும், ஆளுமை மிக்க தலைமை அ.தி.மு.க.விற்கு இல்லை என்ற எதிர்கட்சிகளின் பிரசாரம் ஓயவில்லை.

 72 ஆண்டு கால தி.மு.க.வும், 50 ஆண்டு கால அ.தி.மு.க.வும் போட்டி போட்டுக்கொண்டு “தேர்தல் ஆலோகர்களை” நியமித்துக் கொள்வதும் இதுவே முதல் முறையாகும். 

தி.மு.க. வின் தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரின் ஐ.பேக் டீம் இருக்கிறது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இப்போதுதான் சுனில் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04