ஒடுக்கப்பட்ட மக்களும் சர்வதேச வழக்காடு மன்றமும்

Published By: Gayathri

08 Mar, 2021 | 02:08 PM
image

“பலஸ்தீனம் பற்றிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு”

ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விவஸ்தை கிடையாது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கேட்டு எல்லா கதவுகளையும் தட்டுவது அவற்றின் பழக்கம். 

எந்தக் கதவு திறக்கும்; எந்தக் கதவின் ஊடாக சென்றால் நீதிகிட்டும்; எந்தக் கதவைத் தட்டினால் தாம் விரட்டி அடிக்கப்படுவோம்; என்றெல்லாம் தர்க்க ரீதியாக ஆராயும் பக்குவத்தை அவை இழந்திருக்கின்றன. 

உலகின் மேற்கு மூலையில் இருந்து கிழக்கு மூலை வரை எங்கும் ஏற்றத்தாழ்வுகள். 

நலிந்தவர்கள் மீதான சுரண்டல்கள். அதிகாரம் படைத்ததரப்புக்கள் கட்டவிழ்த்து விடும் கொடுமைகள். 

இந்தக் கொடுமைகளுக்கு இன்று இனச் சுத்திகரிப்பு, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் என்ற ரீதியில் புதிய வரைவிலக்கணங்கள் மொழியப்படுவதையும் பார்க்கிறோம்.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நடத்திய அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆப்கானிஸ்தானிலும் லிபியாவிலும் நேட்டோகட்ட விழ்த்துவிட்ட கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆபிரிக்க ஆயுத நெருக்கடிகளில் சிக்கி உறவுகளையும், உடமைகளையும் உறுப்புக்களையும் இழந்தவர்கள் என்ற ரீதியில் சகல தரப்பினரும் உள்ளனர். பலஸ்தீனர்களையும், இலங்கையர்களையும் மறக்க முடியாது. 

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், ஒவ்வொருவரும் இன, மத, குல, பால் ரீதியாக ஒதுக்கப்படாமல் கௌரவமான பிரஜையாக, தனக்கு உரித்தான சுதந்திரங்களுடன் சிறப்பாக வாழ்வதை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான பஞ்சாயத்து என்ற எண்ணம் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.

ஆனால், ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளின் கைப்பாவையாக மாறியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்ற கட்டமைப்பில், மேற்குலக சமூகம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திலுள்ள நீதி தேவதையின் தராசுத் தட்டுக்களைக் கண்ணுக்குத் தெரியாத நூலால் மிகவும் சூசகமான முறையில் தமது பக்கம் தாழச் செய்யும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-12

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48