இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது

Published By: Digital Desk 4

07 Mar, 2021 | 10:02 PM
image

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.

பல்லேகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் மாதம் 02 ஆம் திகதி குறித்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 

கொவிட் நியூமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட குருதிக்கசிவு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நுகேகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர்,  கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன், குறித்த மருத்துவமனையில் மார்ச் மாதம் 07 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பரவர்தனஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மார்ச் மாதம் 07 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். புற்று நோய் மற்றும் கொவிட் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாத்தறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய பெண் ஒருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் தீவிர இதய நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30