அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு

Published By: Digital Desk 2

06 Mar, 2021 | 10:31 AM
image

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு இருபது தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளிடையே எந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்கீடு செய்வது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க சார்பில் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி ரவி மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் உள்ளிட்டோரும் பங்குபற்றினர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் 20 சட்டப்பேரவை தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஆகியவை பா.ஜ.க போட்டியிடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சிடி ரவி பேசுகையில்,' தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் எங்கள் கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.' என்றார்.

இதனிடையே அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52