ஒருபோதும் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க மாட்டோம் - காமினி லொக்குகே

Published By: Gayathri

05 Mar, 2021 | 08:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 

கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமா என ஜனாதிபதி வினவியபோது மெல்கம்  கர்தினால்  ரஞ்சித் ஆண்டகை இணக்கம் தெரிவிக்கவில்லை. 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சர்வதேச போக்குவரத்து தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன. 

நாட்டு மக்கள் குறிப்பாக கத்தோலிக்க மக்கள் அறிக்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முழுமையற்ற அறிக்கையினை ஆணைக்குழுவினர் சமர்ப்பித்துள்ளார்கள் என்பதை ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பான பொறுப்பினை அரசாங்கத்தால் ஏற்கமுடியாது. 

கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த ஜனாதிபதி முனைந்தபோது அதற்கு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டனை இடமளிக்கவில்லை.

ஆணைக்குழுவில் மாற்றம் ஏற்படுத்தாமல் துரித அறிக்கையினை கோரினார்கள். சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை நிறுத்தப்படவில்லை. விசாரணை நடவடிக்கைள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

ஆகவே, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது. 

நாட்டுக்கு எதிராக எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும் ஒருபோதும் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கமாட்டோம். இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40