தேசிய அடையாள அட்டை தகவல்கள் குறித்து ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

Published By: Digital Desk 2

05 Mar, 2021 | 04:00 PM
image

( எம்.மனோசித்ரா )

' தொழிநுட்ப ரீதியிலான இலங்கை ' என்ற வேலைத்திட்டத்திற்கமைய ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை தகவல்களை தொழிநுட்பமயப்படுத்துவதற்கான (ஒன்லைன்) விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரச நிறுவனங்கள் , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் , தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சேவை பெறுனர்களின் விருப்பத்தின் பேரில் , தேசிய அடையள அட்டை தகவல்களை ஒன்லைன் மயப்படுத்த இவ் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் , இலங்கை வங்கி, நேஷன் ட்ரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி, டயலொக் நிறுவனம், சம்பத் வங்கி, ஸ்டேட் பேங் ஒஃப் இந்தியா, எச்.எஜ்.பி.சி. உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் ஓய்வூதியத் திணைக்களம் , ஹட்டன்  நெஷனல் வங்கி உள்ளிட்டவற்றுடனும் ஒப்பந்தம் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நபர்களின் அடையாளத்தை பிழையின்றி மிக சரியாக உறுதிப்படுத்திக் கொள்வதோடு , துரித சேவையையும் வழங்கக் கூடியதாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08