கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு

Published By: J.G.Stephan

03 Mar, 2021 | 07:31 PM
image

(எம்.மனோசித்ரா)


உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை வலியுறுத்தி  இலங்கை கத்தோலிக்க பேரவையால் மார்ச் 07 ஆந் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு ஞாயிறு தின போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த  தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் குற்றவாளிகளையும் வெளிக்கொணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கும் அழுத்தம் பிரயோகிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தினதும் அரச அதிகாரிகளினதும் கவனயீனம் இல்லாதிருந்தால் அதனை தடுத்திருக்க முடியும் என்பது இரகசியமல்ல.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக அப்போதிருந்த அரசாங்கமும், அதனை பயன்படுத்தி தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ள அரசாங்கமும் செய்த ஒரேயொரு விடயம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினூடாக விசாரணைகளை முன்னெடுத்தமையாகும்.

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. எனினும் ஆணைக்குழுக்களையும் ஆணைக்குழு அறிக்கைகளையும்  மூடிமறைப்பதனால்  குற்றவாளிகளையும் சூத்திரதாரிகளையும் அரசியல் அதிகாரத்திற்காக தீவிரவாதத்தை பாவித்தவர்களும் தப்பிக்கச் செய்ய வாய்ப்பு ஏற்படும். 

தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை கத்தோலிக்க பேரவை மார்ச் 07 ஆந் திகதியை கருப்பு ஞாயிற்றுத் தினமாக அறிவித்து நீதியை கோருகின்றது. தேசிய மக்கள் சக்தி இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15