வெற்றியின் இரகசியம் - சுனந்தாஜியின் பகவத்கீதை சொற்பொழிவுகள்

Published By: Gayathri

04 Mar, 2021 | 03:28 PM
image

பகவத் கீதை வாழ்வின் வழிகாட்டி ஆகும். இது பண்டைய வேதாந்தத் தத்துவத்தை தெளிவுபட விளக்குகின்றது. 

இன, மத, மொழி மற்றும் சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, எக்காலத்திற்கும் பொருந்தும், உலகளாவிய, வாழ்க்கை மற்றும் வாழும் முறை பற்றிய கோட்பாடுகளை வேதாந்தத் தத்துவம் விளக்குகின்றது. 

இக் கோட்பாடுகள், தொழில், சமூகம் மற்றும் குடும்பம் போன்ற அனைத்து மட்டங்களிலும் ஏற்படும் உலகின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான கூர்மையான புத்தியை ஒருவருக்கு வழங்குகின்றது. 

இதன் விளைவாக வெளியுலக வெற்றி மற்றும் உள்முக அமைதி எனும் அரிதான சேர்மானத்தை ஒருவர் ஒருங்கே அனுபவித்து மகிழ்கின்றார். 

எல்லாவற்றிற்கும் மேலாக, வேதாந்தம் மனிதனின் இறுதி இலக்கான உள்முக பூரணத்துவத்தை நோக்கி, அதாவது ஆன்மீக அறிவொளியை நோக்கிக்கொண்டு செல்கின்றது.

செயலொன்றைச் சரியாகச் செய்வதற்கான நடைமுறை நுட்பத்தை, கீதையின் மூன்றாம் அத்தியாயம் விளக்குகின்றது. 

வெற்றி என்பது ஒரு விளைவேயாகும். இங்கு சரியான செயலே அதற்கான மூல காரணம். ஒரு செயலைச் சரியாகச் செய்வதற்கு மூன்று விடயங்கள் அவசியமாகும். 

அவையாவன, மன ஒருமை, விடா முயற்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகும். 

மூன்றாம் அத்தியாயம் இவை பற்றி விளங்குவதுடன், செயலைச் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளையும் அவற்றைக் கடப்பதற்கான நுட்பங்களைப் பற்றியும் விளக்குகின்றது.

சுனந்தாஜி உலகப் புகழ்பெற்ற வேதாந்த தத்துவஞானி, சுவாமி பார்த்தசாரதியின் மகளும் சிஷ்யையுமாவார். 

சுனந்தாஜி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வேதாந்தத்தைக் கற்றும், கற்பித்தும் அதைப் பற்றி ஆய்வும்செய்து வருகின்றார். 

பகவத் கீதை பற்றி, இன்றைய காலத்திற்கு பொருந்தும் வகையில் அமையும் சுனந்தாஜியின் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த உரை, வழங்கும் முறை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பாராட்டப்படுகின்றது. 

மேலும் அவர் உலகெங்கிலும் உள்ள பிரபலமான தனியார் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், அன்றாட வாழ்க்கையில் வேதாந்தத்தின் நடைமுறைப் பயன்பாடு குறித்து உரையாற்றியுள்ளார். 

சுனந்தாஜி, பகவத் கீதையின் 3 ஆம் அத்தியாயத்தில், 2021 மார்ச் 11 வியாழக்கிழமை முதல் மார்ச் 14 ஞாயிற்றுக்கிழமை வரை, இலங்கை நேரம் மாலை 5.30 முதல் மாலை 6.45 மணி வரை சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளார்.

வருடாந்த பகவத் கீதை சொற்பொழிவுகளின் முதன்மை அனுசரணையாளர் கணபதி செட்டி செல்வநாதன் அறக்கட்டளை நிறுவனமாகும். 

இவ்வருடம் விரிவுரைகள் நேரடியாக இணையவழி மூலம் இடம்பெறும். இச் சொற்பொழிவுகளில் இலங்கை மக்கள் அனைவரும் பங்கேற்க முடியும். 

இவ்விரிவுரைகளுக்கான அனுமதி இலவசமாகும். ஆனால் முன் பதிவு தேவை. இதற்கு vdnt.org/KarmaYoga இல் பதிவு செய்யவும். 

இத்தகவலை ஏனையோரும் பயன் பெறும் வண்ணம் பகிரவும்.

மேலதிக தகவல்களுக்கு www.vedantacolombbo.org எனும் இணைய முகவரியை அணுகவும் அல்லது info@vedantacolombo.org எனும் மின்னஞ்சல் முகவரியில்/ 077 173 0318/ 071 063 8837 இல் தொடர்பு கொள்ளவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35