விமல், கம்பன்பில எதிர்க்கின்றனர் என்பதற்காக பாதிக்கப்பட்டோரின் உரிமையை மறுக்க முடியாது

Published By: Ponmalar

12 Aug, 2016 | 07:18 PM
image

அரசாங்கத்தினால் அமைக்கபடவுள்ள காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம்  ஊடாக  நாட்டில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று  சுதந்திரக் கட்சியின்  பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான  டிலான் பெரெரா தெரிவித்தார். 

விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் கூச்சலிடுகின்றார்கள் என்பதற்காக   காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கின்ற உரிமையை யாரும் மறுக்க முடியாது என்றும் டிலான் பெரெரா குறிப்பிட்டார். 

காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம்  தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அமைச்சர் டிலான் பெரெரா  இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் 

காணாமல் போனோர் குறித்த  ஆராய்வதற்கான நிரந்தர அலவலகத்தை அமைப்பதற்கான  சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

அதாவது அரசாங்கத்தினால் அமைக்கபடவுள்ள காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம்  ஊடாக  நாட்டில் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  

விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் கூச்சலிடுகின்றார்கள் என்பதற்காக   காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்கு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கின்ற உரிமையை யாரும் மறுக்க முடியாது. விமல்வீரவன்சவும் உதய கம்பன்பிலவும் கூச்சலிடலாம். ஆனால் மக்களுக்கு தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம் கூறப்பட வேண்டும். 

இதேவேளை இவ்வாறு ஒரு சட்டமூலம் எமது நாட்டில் நிறைவேற்றப்பட்டமை வரவேற்க்கத்தக்க விடயமாகும். காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படுவதில் தாமதிக்கக்கூடாது. இனவாதிகள் கத்துகின்றனர் என்பதற்காக இவற்றை செய்யாமல் இருக்க முடியாது. இனி இந்த நாட்டில் இனவாதிகளுக்கு இடமில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00