கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் புதைக்க எதிர்ப்பு -போராட்டத்திற்கு தயாராகும் இரணைதீவு மக்கள்

Published By: Digital Desk 4

02 Mar, 2021 | 06:35 PM
image

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி மக்கள் நாளை புதன்கிழமை (3) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரணை தீவு பங்குத்தத்தை அருட்தந்தை மடுத்தீன் அடிகளார் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லீம் சகோதரர்களால் பல்வேறு பகுதிகள் முன்னொழியப்பட்ட போதிலும் அவற்றை தவித்து யுத்ததால் இடம் பெயர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் 2017 ஆம் ஆண்டு பல கட்ட போராட்டங்களின் பின்னர் மீள் குடியேறிய எமது இரனை தீவு பகுதிகளில் உடல்களை அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கவலை அழிப்பதுடன் தங்களுக்கு மகிழ்ச்சி இன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இரனைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீர் ஊடாக  தொற்று பரவ வாய்புள்ளதாகவும் அண்மைக் காலமாகவே இரணை தீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம்முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதிலை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகியுள்ளது.

 எனவே மக்கள் அனைவரும் இணைந்து நாளைய தினம் புதன் கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் யாழ்பாண மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40