பாவனைக்குதவாத மரக்கறிகளை விற்பனை செய்த வியாபரி கைது

Published By: Digital Desk 4

03 Mar, 2021 | 05:47 AM
image

மட்டக்களப்பு நகரில் மரக்கறிகளை விற்பனை செய்த வியாபார நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (02) பொதுசுகாதார  பரிசோதகர் முற்றுகையிட்டு சோதனையில் மனித  பாவனைக்கு பயன்படுத்த முடியாத மரக்கறிகளை விற்பனை செய்த வர்த்தகரை கைது செய்ததுடன்  224 கிலோ கிராம் மரக்கறிகளை மீட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பகல் குறித்த வியாபார நிலையத்தை கோட்டமுனை  பொதுசுகாதார பிரிவு  பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொதுசுகாதார பரிசோதகர் குழுவினர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது  மனித  பாவனைக்கு  பயன்படுத்த முடியாத மரக்கறி வகைகளை  விற்பனை செய்த வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் மனித  பாவனைக்கு  பயன்படுத்த முடியாத 224 கிலோக்கிராம்  மரக்கறிகளை மீட்டனர்.

குறித்த வர்தக நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நகர் பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு  குறைந்த விலையில் பழுதடைந்த மரக்கறி வகைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைப்பற்றப்பட்ட  பழுதடைந்த மரக்கறிகளையும் அதனை விற்பனை செய்து வந்த வியாபாரியையும்  சட்ட நடவடிக்கைகளுக்காக  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்  ஆஜயர்படுத்தபடவுள்ளதாக  மட்டக்களப்பு  கோட்டமுனை பொது சுகாதார  பிரிவு  பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22